Publish Date: Wed, 25 May 2022 (08:44 IST)
Updated Date: Wed, 25 May 2022 (08:46 IST)
வீரப்பன் சகோதரர் மாதையன் உயிரிழப்பு!
சந்தன கடத்தல் வீரப்பன் சகோதரர் மாதையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிந்ததே
இந்த் நிலையில் சந்தன கடத்தல் வீரப்பன் சகோதரர் மாதையன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்
சேலம் மத்திய சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வந்த மாதையன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன