வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை
வீரப்பன் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவரது கூட்டாளிகள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மைசூர் சிறையில் இருந்து மொத்தம் 348 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஆயுள் தண்டனை பெற்ற வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 18-ஆண்டுகளாக கோவை, மைசூர் மற்றும் சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் வழக்குகளில் தொடர்புடைய நபர்களான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு நன்னடத்தை காரணமாக மைசூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.