1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு
1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் 1000 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தில் பேருந்து ஒன்று 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில் 85 பேர் பயணம் செய்தனர். தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டிகே தெவுராலி பகுதிக்கு பேருந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. அப்போது சாலையின் வளைவு ஒன்றில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 43 பேர் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 15 பேரை காத்மண்டிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மோசமான சாலைகளும், அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வதும்தான் விபத்துக்களுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுயுள்ளனர்.