நேற்றைய தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் போது விஜய்க்கு பகவத் கீதை உள்பட 3 மதங்களின் நூல்கள் பரிசளிக்கப்பட்டது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம் பி ரவிக்குமார் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
பௌத்தம் இந்த சமூகத்தில் தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியபோது, சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கனின் தலைமையில் ஒரு எதிர்ப்புரட்சியைத் தொடங்கினார்கள். அந்த எதிர்ப்புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது.பகவத் கீதை, இந்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக இயற்றப்பட்டது.” என்று தனது நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும்.”
இவ்வாறு விசிக எம்பி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.