Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள்

Advertiesment
கடையை  அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள்
, சனி, 9 ஜனவரி 2021 (22:57 IST)
கரூரில் காதல் விவகாரத்தில் சமீபத்தில் சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டார் இதைத்தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளுக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை.


கரூர் காமராஜர் நகரைச் சேர்ந்த ஹரிஹரன் வயது 23 இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார் இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த வேலன் (வயது 49) என்பவரின் (18 வயது) கல்லூரி மாணவி இவருக்கு காதல் ஏற்பட்டது தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில் இந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள் தங்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பதாக இருந்தனர் இந்நிலையில் காதலை கைவிடும்படி கோரியுள்ளனர் பெற்றோரின் பேச்சைக் கேட்டு அந்தப் பெண் காதலனுடன் கடந்த இரண்டு மாதமாக தொடர்பில் இல்லாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஹரிஹரன் காதலியை தொந்தரவு செய்துள்ளார். இதை அந்தப் பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் கண்டித்துள்ளனர் சமீபத்தில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு பைக்கில் வந்த ஹரிஹரனை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர் இதைத்தொடர்ந்து பெண்ணின் பெரியப்பா சங்கர் (வயது 50) தாய்மாமன்கள் கார்த்திகேயன் (வயது 40) வெள்ளைச்சாமி (வயது 38) ஆகிய மூன்று பெயர் கரூர் நகர போலீசார் கைது செய்தனர்.

மேலும் பெண்ணின் தந்தை வேலன் (வயது 49) சித்தப்பா (முத்து 47) ஆகிய இருவருக்கும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சொந்தமான பழைய இரும்பு கடை இரும்பு பொருட்கள் வாங்கும் கடையை உடைத்து அடித்து நொறுக்கியது மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் சம்பவ இடத்தில் கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் அப்பொழுது கொலை செய்யப்பட்ட ஹரிஹரனின் உறவினர்கள் இதற்கு மட்டும் விசாரணைக்கு வந்து விட்டீர்கள் ஆனால் எங்களது மகன் ஹரிஹரன் கொலைக்கு காரணமாக இருந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை: ஃபிஃபா நடுவராக 26 வயது தமிழ் முஸ்லிம் இளைஞர் தெரிவு