வள்ளுவனாக அவதாரம் எடுத்த கமல்.. வைரல் புகைப்படம்

Arun Prasath
செவ்வாய், 5 நவம்பர் 2019 (14:59 IST)
திருவள்ளுவர் குறித்தான விவகாரங்கள் எழுந்துவரும் நிலையில் கமல் திருவள்ளுவர் போல் கெட் அப் அணிந்து அமர்ந்திருக்கும் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போல் வெளியான புகைப்படத்தை தொடர்ந்து, பாஜக அந்த புகைப்படத்தை ஆதரித்து வருகிறது. மேலும் அந்த புகைப்படம், “வள்ளுவரை இந்துத்துவாக்குள் அடைக்கப்பார்க்கிறது” என முக ஸ்டாலின், திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்து வாருகின்றனர்.

இதனிடையே வருகிற 7 ஆம் தேதி நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளருமான கமல்ஹாசனின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில், கமல் ரசிகர்கள் கமல் திருவள்ளுவர் கெட் அப்பில் இருப்பது போல் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனர். மேலும் அதில் ”அகர முதல் எழுத்தெல்லாம், உலக நாயகன் முதற்றே உலகு” என எழுதியுள்ளது. மேலும் கமலின் கையில் உள்ள ஓலைச்சுவடியில் “மக்கள் நீதி மய்யம்” என எழுதியுள்ளது.

இதனை ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்பட தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அதிமுகவுடன் கூட்டணி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய விஜய்?!.. அரசியல் பரபர...

அடுத்த கட்டுரையில்
Show comments