Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த குரல் எனது குரல் அல்ல.. ஆட்சியர் விளக்கம்

Advertiesment
அந்த குரல் எனது குரல் அல்ல.. ஆட்சியர் விளக்கம்

Arun Prasath

, செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:11 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞரை “ராஸ்கல்” என திட்டிய ஆடியோ வெளிவந்த நிலையில், அதில் உள்ள குரல் தனது குரல் அல்ல என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தனது பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறை மூட கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் என்பவருக்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார் செம்பிய நத்தம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர். அப்போது ஆட்சியர் “உங்களுக்கு அக்கறை இருந்தால் உங்கள் பகுதியில் உள்ள பிடிஓ அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

மேலும் ஆத்திரமடைந்த ஆட்சியர், “உங்களுக்கு கலெக்டர் என்ன சரவண பவன் சர்வரா? என கேட்டு “ராஸ்கல்” என திட்டியும் உள்ளார். இதன் ஆடியோ பதிவு செய்தி ஊடகங்களில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல எனவும், மேலும் அந்த இளைஞரிடம் பேசியது தான் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிரவாதிகள் ஊடுருவல்; அயோத்தி தீர்ப்பு தள்ளிவைப்பா?