Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டிற்குள் வெடித்த துப்பாக்கி சத்தம்.. அலறிய முகேஷ்.. நடந்தது என்ன??

வீட்டிற்குள் வெடித்த துப்பாக்கி சத்தம்.. அலறிய முகேஷ்.. நடந்தது என்ன??

Arun Prasath

, செவ்வாய், 5 நவம்பர் 2019 (14:38 IST)
சென்னை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ், தனது நண்பரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட வண்டலூர் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் முகேஷ். இந்நிலையில் இன்று அவரது நண்பரான விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார் முகேஷ். அப்போது விஜயின் சகோதரன் உதயா வீட்டிற்கு வெளியே “கேம்” விளையாடிக் கொண்டிருந்தார்.

வீட்டிற்கு உள்ளே விஜய்யும் முகேஷும் இருக்க, திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் பதறிபோனான் உதயா. அப்போது விஜய் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். உடனடியாக உள்ளே சென்ற உதயாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நெற்றியில் துப்பாக்கி பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார் முகேஷ்.

உடனடியாக முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உதயாவை தாழம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான விஜய்யை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். விஜய்க்கும் முகேஷ்க்கும் என்ன பகை? எதற்காக விஜய் சுடப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும் காற்று மாசு - தப்பிக்க என்ன வழி?