Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற 5 ஆண்டுகள் ஆகும்: வைரமுத்து

Siva
வியாழன், 18 ஏப்ரல் 2024 (17:45 IST)
தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் பிழையான நபரை இந்த தேர்தலில் நாம் தேர்வு செய்துவிட்டால் அநீதி வெளியேற மீண்டும் 5 ஆண்டுகள் ஆகும் என்று கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
 
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
 
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
 
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்
 
வைரமுத்துவின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. குறிப்பாக இந்த கருத்துக்கு எதிரான கமெண்ட் குறித்து தற்போது பார்ப்போம்.
 
இப்படியொரு கவிதையை எழுதிவிட்டு பிழையான ஒரு நபருக்கு தான் நீங்கள் வாக்களிக்க போகிறீர்கள் கவிஞரே. உங்களால் சொல்லும், செயலுமாக இருக்க முடியாத போது, ஊருக்கு உபதேசம் செய்வது ஏன்?
 
திமுகவிற்கு வாக்களிப்பதும், ஒளிய தெரியாதவன் களவாணி வீட்டில் ஒளிவதும் ஒன்று தான் சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே
 
ஆமாம். போதை மருந்து கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கை தன் கட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்பில் வைத்திருந்த திருட்டு தி.மு.க விற்கு ஓட்டு போடுவது பிழையானது. ஆகவே அனைவரும் பிரதமர் மோடி தலைமையில் நேர்மையான ஆட்சி 3வது முறையாகவும் தொடர தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments