தமிழக அரசியல் தலைவர்களில் தமிழிசை அளவுக்கு சக அரசியல்வாதிகளாலும், நெட்டிசன்களாலும் கிண்டலடிக்கப்பட்டது அனேகமாக யாரும் இருந்திருக்க மாட்டார்கள். எவ்வளவு கிண்டல், நக்கல், எத்தனை தனிப்பட்ட தாக்குதல்கள். ஆனால் அத்தனையையும் சிரித்து கொண்டே சமாளித்தது மட்டுமின்றி அவ்வப்போது தகுந்த பதிலடியும் கொடுத்தவர் தமிழிசை அவர்கள். இந்த நிலையில் அவரது உழைப்பு, தன்னம்பிக்கைக்கு கிடைத்த பரிசாக தற்போது தெலுங்கனா கவர்னர் பதவி தேடி வந்துள்ளது. தமிழ் மற்றும் தமிழகத்தின் பெருமையை அவர் தெலுங்கானாவிலும் பரப்புவார் என்று எதிர்பார்ப்போம்
இந்த நிலையில் ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது என்றும், தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன் என்றும் கவர்னர் பதவியேற்கவிருக்கும் தமிழிசையை கவியரசு வைரத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கவர்னர் பதவி கொடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்த தமிழிசை, இது கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், தான் தெலுங்கானா சென்றாலும் தமிழகம் மீது எனது அன்பு என்றும் குறையாது என்றும், எனக்கு தமிழகமும் ஒன்றுதான், தெலுங்கானாவும் ஒன்று தான் என்றும் ஏனெனில் ஒரே நாடு ஒரே தேசம் என்ற கொள்கையை உடையவர்கள் நாங்கள் என்றும் தெரிவித்தார்