Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பால் விலை உயர்வு – ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு !

பால் விலை உயர்வு – ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு !
, ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (10:49 IST)
பால் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.

பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதேசமயம் பால் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை 4 ரூபாய் உயர்த்தியும், எருமை பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விற்பனை விலையை 6 ரூபாய் அதிகப்படுத்தி இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன்  என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் ’ பால்விலையை ஒரேயடியாக 6 ரூ உயர்த்தியது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. இதனால் அதிகம் பாதிக்கப்பட போவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குழந்தைகள்தான். அதனால் இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் – மீண்டும் தொடங்கப்பட்ட சேவைக்கட்டணம் !