புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசால் ஆதரவளிக்கப்படுவதாக சொல்லப்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பு இந்திய ராணுவ வீரர்கள் செல்லும் வாகனத்தின் மீது நடத்திய தாக்குதலில் 45 வீரர்கள் பலியாகினர். இதையடுத்து இன்று பாகிஸ்தான் எல்லையில் விமானப்படையின் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கும் இந்திய அரசிற்கும் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியின் இந்த துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதுபோல கவிஞ்சர் வைரமுத்துவும் தாக்குதல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில்’
'போர்மீது விருப்பமில்லை.
ஆனால், தீவிரவாதத்தின் மீது
தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!
அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்