Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோ தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு திடீரென நிறுத்தி வைப்பு!

வைகோ தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு திடீரென நிறுத்தி வைப்பு!
, வெள்ளி, 5 ஜூலை 2019 (11:45 IST)
வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் என சற்றுமுன் எம்பி, எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் சற்றுமுன் அந்த தீர்ப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்து உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதத்தைக் கட்டிய வைகோவின் வழக்கறிஞர்கள், தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்று தீர்ப்பு ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் வைகோவிற்காக ஜாமின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜாமினும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 'இந்த தீர்ப்பு வெளியான இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன். நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரில் சொன்னேன். நான் பேசியது தேச துரோகம் அல்ல.
 
மேலும் நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தேன். அதில் குறைந்தபட்ச தண்டனை நான் கேட்டதாக இருந்தது எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன். ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன். விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நான் என் கருத்தை தொடர்ந்து விதைப்பேன், தொடர்ந்து விடுதலை புலிகளை ஆதரித்து பேசுவேன் என வைகோ தெரிவித்தார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#Budget2019: மத்திய பட்ஜெட்.... லைவ் அப்டேஸ்!!