கமல்ஹாசன் உள்ளே.. வைகோ வெளியே.. 4 திமுக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் பட்டியல்:

Mahendran
புதன், 28 மே 2025 (11:15 IST)
ராஜ்ய சபா தேர்தலுக்கான நான்கு பேர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளதை அடுத்து, அதில் மதிமுகவின் வைகோவுக்கு இடமில்லை என்ற தகவல் அக்கட்சித் தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வைகோ, அன்புமணி உள்ளிட்ட ஆறு தமிழக ராஜ்ய சபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
 
இந்த நிலையில், எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு ராஜ்ய சபா உறுப்பினர்கள் கிடைக்கும் என்ற நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
மீதமுள்ள மூன்று வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் ஆகிய மூவர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாநிலங்களவை எம்பி பட்டியலை பொருத்தவரை, திமுக சார்பில் வில்சனுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, கட்சி தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட திமுக வாய்ப்பளிக்கும் என கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியதில் எந்த வருத்தமும் இல்லை: வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! டெல்லி முதல்வர் முடிவு..!

ஒடிசா பா.ஜ.க. மூத்த தலைவர் பிதாபாஷ் பாண்டா சுட்டுக் கொலை! காங்கிரஸ் கடும் கண்டனம்..!

தங்கம் விலை இன்றும் உயர்வு.. ரூ.90,000ஐ நெருங்கிவிட்டது இம்மாதத்திற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments