மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.. வைகோ குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 10 ஜூலை 2025 (11:56 IST)
சமீப காலமாக மல்லை சத்யாவின் நடவடிக்கை சரியில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே துரை வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது வைகோவும் ’மல்லை சத்யா நடவடிக்கை சரியில்லை என்று கூறியிருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்த வைகோ, மதிமுகவில் எந்த நெருக்கடியும் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் பல காலம் தனக்கு துணையாக இருந்த மல்லை சத்யா சமீப காலமாக நடவடிக்கை சரியில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். 
 
அதே நேரத்தில், கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம் என்றும், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். 
 
மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது என்றும், அது உண்மையும் இல்லை என்றும் வைகோ இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார். ஏற்கனவே மதிமுகவிலிருந்து செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் ஆகியோர் வெளியேறிய நிலையில், மல்லை சத்யாவும் வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

ஸ்ட்ரெச்சருடன் நடுத்தெருவில் நோயாளியை கொண்டு சென்ற உறவினர்கள்.. மருத்துவமனையின் பாதுகாப்பு கேள்விக்குறி..!

அரசு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை: முதல்வர் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments