Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா விதித்த 50% வரி.. டிரம்புக்கு பிரேசில் அதிபர் கொடுத்த பதிலடி..!

Mahendran
வியாழன், 10 ஜூலை 2025 (11:48 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, உலக நாடுகளுக்கு வரி விதிப்பு மூலம் டிரம்ப் அச்சுறுத்திய நிலையில், தற்போது பிரேசிலை குறிவைத்துள்ளார். ஆகஸ்ட் 1 முதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
டிரம்பின் மிரட்டலுக்கு லூலா பதிலளித்தபோது, "பிரேசில் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம். ஆட்சி கவிழ்ப்பைத் திட்டமிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பிரேசிலின் சட்ட வரம்புக்குள் மட்டுமே வரும். 
 
உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பிரேசில் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவுடன் $410 பில்லியன் வர்த்தகம் செய்துள்ளோம். இந்த வரி விதிப்பை பிரேசிலின் பொருளாதார சட்டங்களின்படி எதிர்கொள்வோம்," என்று தனது 'எக்ஸ்' தளத்தில் உறுதியாகப் பதிலளித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்து 38 நாள் ஆன குழந்தை.. குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு வாரமாக மாறாமல் இருக்கும் வெள்ளி விலை..!

வாக்காளர் அடையாள அடையாள அட்டையில் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில் முதல்வரின் படம்.. அதிர்ச்சி தகவல்..!

மனைவியுடன் உல்லாசம்! உயிர் நண்பனின் உயிரை எடுத்த கணவன்! - கர்நாடகாவில் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வது மிக எளிது: ஈரான் தலைவர் கருத்துக்கு காமெடி பதில் சொன்ன டிரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments