சமீப காலமாக மல்லை சத்யாவின் நடவடிக்கை சரியில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே துரை வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது வைகோவும் மல்லை சத்யா நடவடிக்கை சரியில்லை என்று கூறியிருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்த வைகோ, மதிமுகவில் எந்த நெருக்கடியும் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் பல காலம் தனக்கு துணையாக இருந்த மல்லை சத்யா சமீப காலமாக நடவடிக்கை சரியில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம் என்றும், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது என்றும், அது உண்மையும் இல்லை என்றும் வைகோ இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார். ஏற்கனவே மதிமுகவிலிருந்து செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் ஆகியோர் வெளியேறிய நிலையில், மல்லை சத்யாவும் வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.