Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் - வைகோ பேட்டி (வீடியோ)

Webdunia
திங்கள், 14 மே 2018 (12:13 IST)
காவிரிக்காக அனைத்து கட்சிகளும் போராடி வரும் நிலையில் மத்திய அரசிற்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயண துறையின் முதலீட்டு மண்டலமாக்க 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை மத்திய அரசிற்கு கொடுத்தது பச்சைத்துரோகம் என வைகோ பேட்டியளித்துள்ளார்.

 
கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது., தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டுமென நினைக்கிறது மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திரமோடி அரசு. ஏற்கனவே இந்தியாவிற்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனத்தை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியதோடு, அந்த நிறுவனம் ஒரு ஆக்டோபஸ் போல, ஆகவே, அமேசன், சீனாவை சார்ந்த அலிபாபா ஆகிய நிறுவனங்கள் புதுமையாக வருகின்றது.
 
ஆகவே, இந்த ஆன்லைன் நிறுவனங்கள் சீனாவின் பொருட்களை ஊக்குவித்து இந்திய பொருட்களை அழிக்கும் செயலில் முழுமையாக ஈடுபடும் என்றதோடு, தமிழக அமைச்சர்கள் முன்னுக்கு பின்னான முரணான பதில்களை அழித்து பொதுமக்களிடம் ஏராளமான சர்ச்சைகளை கிளப்பி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும்., கர்நாடாகா தேர்தலில் யார் வந்தாலும் காவிரி பிரச்சினைக்கும், தமிழகத்திற்கும் நீதி கிடைக்காது என்று உறுதிபட தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்! தவெக விஜய்யின் இரங்கல் பதிவு!

விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு? பிரச்சாரத்திற்கு முழுவதும் தடை? - என்ன நடக்கும்?

திமுகவின் அஜாக்கிரதையே இவ்வளவு உயிர் பலிகளுக்கு காரணம்!? - அண்ணாமலை கண்டனம்!

கரூர் துயர சம்பவம்! உடனே கரூர் கிளம்பிய மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடி இரங்கல்!

விஜய் பிரச்சாரத்தில் துயரம்! கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலி! - கண்ணீரில் கரூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments