Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை மித்ராவுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான தடுப்பூசி

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (00:05 IST)
தமிழக சிறுமி மித்ராவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட விலையுயர்ந்த ஊசி இன்று அக்குழந்தைக்கு செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வரும் சதீஷ் – பிரியதர்ஷினி ஆகியோரின் மகள் இரண்டு வயதான மித்ரா. சமீபத்தில் மித்ராவை உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தபோது குழந்தைக்கு தண்டுவட சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கான தடுப்பு மருந்து ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. அதை வாங்க ரூ.16 கோடி தேவைப்படும் என்ற நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக நிதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பலர் தாராளமாக நிதி அளித்ததின் பேரில் குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கான பணம் கிடைத்துள்ளது. ஆனால் மருந்தை இந்தியாவிற்குள் கொண்டு வர ரூ.6 கோடி இறக்குமதி வரி உள்ளதால் மருந்தை வாங்குவதில் சிக்கல் இருந்து வந்தது.

இதுகுறித்து பலரும் மத்திய அரசுக்கு வரிசலுகை வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதியிருந்தார், இந்நிலையில் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கான மருந்துகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று தனியார் மருத்துவமனையில் முதுகு தண்டுவட பாதித்த குழந்தை மித்ராவுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி  செலுத்தப்பட்டது.

குழந்தை மித்ரா தண்டுவட பாதிக்கு சரியாகி மற்ற குழந்தைகளைப் போல் இயல்பாக இருக்க வேண்டுமென நினைத்த நாட்டு மக்கள்  பிரார்த்தனை பலித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments