18 வயதிற்கு மேலானவர்களுக்கு ஏற்கனவே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையி 14 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி எப்போது போடப்படும் என்பது குறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்றும் காய்ச்சல் ஏற்படுபவர்கள் மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி கொண்டாலே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் 14 முதல் 17 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகளில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்