Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெகா முகாமில் தடுப்பூசி போட வேண்டுமா..? மாற்றப்பட்ட தேதிகள் விவரம்!

Advertiesment
Omicron Virus
, சனி, 25 டிசம்பர் 2021 (12:41 IST)
நாளை நடைபெறும் 16வது கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது. 
 
அதன்படி தமிழகம் முழுவதும் 16வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 
 
இன்று சனிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இந்த வார தடுப்பூசி முகாம் நாளைக்கு (ஞாயிற்றுக் கிழமை) மாற்றப்பட்டுள்ளது. இதேபோல அடுத்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதாலும் அடுத்த வாரமும் ஞாயிற்றுக்கிழமையே தடுப்பூசி முகாம் நடைபெறும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன?