செம்பரம்பாக்கத்தில் நீர் திறபு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்த நீரின் அளவு அதிகரித்து. எனவே, முதலில் 1000 கன அடி முதல் 9 ஆயிரம் கன அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.
இதன் பின்னர் மழை இல்லாத காரணத்தினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது புரெவி புயல் காரணமாக மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று நண்பகல் முதல் நீர் திறக்கப்பட்டது. தற்போது சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 573 கனஅடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் நீர் திறபு அதிகரித்ததால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடையாற்றின் கரையோறம் ஏற்கனவே வெள்ளம் பெடுக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழல் ஏற்படுள்ளது.