தமிழகத்தில் புதிய திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ள நிலையில், அதில் தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தொடங்கிய நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய பொதுமக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், சிறப்பு முகாம்கள் வழியாகவும் விண்ணப்பம் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர்கள் 3.25 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தினர் 9,120 பேர் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின்படி, ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.