உரிமம் பெறாத ஓட்டுனர்களால் விபத்துகளுக்கு வாய்ப்பு.. தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:33 IST)
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக உரிமம் பெறாத ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கப்படுவதாகவும் இது விபத்துக்கு  வழி வகுக்கும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளனர். 
 
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறும் நிலையில் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கப்பட்டு வருகின்றன.
 
 இதற்கு ஓட்டுனர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ மற்றும் டெம்போ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்க முயற்சி நடக்கிறது என்றும் உரிமம் பெறாத ஓட்டுனர்களால் விபத்து ஏற்படும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர். 
 
ஆனால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போது ஓட்டுநர்கள்  பேருந்துகளை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்து வருவதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: திரண்டுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்!

மோன்தா புயல் மையம்.. தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.. ஆந்திராவுக்கு ரெட் அலர்ட்!

கரூரில் நடந்த கூட்ட நெரிசல்: சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரே நாளில் 4 மனுக்கள் விசாரணை..!

கரூர் துயர சம்பவ விவகாரம்: புஸ்ஸி ஆனந்துக்கு சிபிஐ அனுப்பிய சம்மன்.. தீவிர விசாரணை..!

மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments