பொங்கல் சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும் என்ரும், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்படும் என்ரும் திட்டமிட்டபடி வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சங்க ஊழியர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று இரவு 11:59 மணியுடன் பேருந்துகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயல்பான பேருந்துகளையே இயக்க முடியுமா என்ற சவால் ஏற்பட்டுள்ள நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகளை எப்படி அரசு இயக்கப் போகிறது என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்து உள்ளது.
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு பிரச்சனை இன்றி பேருந்துகள் இயக்கப்படுமா? அல்லது பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதே கேள்விக்குறியாகுமா என்பதையும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்