'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், அதிகாரிகளின் கையெழுத்துடன் மூட்டையாக கட்டப்பட்டு வைகை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான மனுக்களை அளித்து வந்தனர். ஆனால் இந்த மனுக்கள் வைகை ஆற்றின் அருகே ஆற்றுப் பாலத்திற்கு அடியில் மூட்டையாகக் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்த மனுக்களை, தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், அவை கடந்த ஆகஸ்ட் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி மற்றும் நெல் முடிக்கரை போன்ற பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு பின்னணியில் உள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.