Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீ டூ புகார் செய்த ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல் விடுத்த உமாசங்கர்

மீ டூ புகார் செய்த ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல் விடுத்த உமாசங்கர்
, சனி, 20 அக்டோபர் 2018 (17:31 IST)
சங்கீத வித்வான் உமாசங்கர் மீது ட்விட்டரில் பாலியல் புகார் கூறிய தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனிக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஜான் விஜய் மீதும், கடம் வித்வான் உமா சங்கர் மீதும் பிரபல டிவி பெண் தொகுப்பாளர் ஸ்ரீ ரஞ்சனி பாலியல் புகார் கூறினார். ஒரு பேட்டிக்காக அணுகியபோது சில நாட்கள் கழித்து நள்ளிரவில் போன் செய்து ஆபாசமாக பேசினார் என்று குற்றம் சாட்டினார்.
 
இதை பற்றி கூறிய ஜான் விஜய் , சாக்கடையில் கல் வீசினால் நம் மீது தெறிக்கும் என்று சொல்வார்கள். இந்த வி‌ஷயம் குறித்துப் பேசுவதும் சாக்கடையில் கல் வீசுவதற்கு சமமானதாகவே  நான் கருதுகிறேன் என கூறி நழுவினார். ஆனால், ஜான் விஜய்யின் மனைவி தன் கணவரின் இந்த மதிகெட்ட செயலுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று சொன்னதாகவும் , விஜய் மனைவி செய்த அந்த காரியத்தை நான் பாராட்டுகிறேன் என்றும்  தொகுப்பாளி ஸ்ரீரஞ்சனி கூறினார்.
 
அடுத்தாக, அவர் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு  நபரான ‘உமா சங்கர்’ என் நண்பர்கள் சிலரை அணுகி, ஸ்ரீரஞ்சனியிடம் பேசி, அந்த டுவிட்டை நீக்கச் சொல்லுங்கள் என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் என் நண்பர்கள் ‘இந்த வி‌ஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் தொடர்ந்து மிரட்டல் வருவதுகிறது. என்று தொகுப்பாளி  ஸ்ரீரஞ்சனி தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரமுத்து மிகவும் கண்ணியமானவர் - குஷ்பு ஆதரவு