Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பளையானு கேட்டபோதே எதிர்த்திருந்தா? ஓபிஎஸ் பக்கம் திரும்பிய உதயநிதியின் கோபம்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (16:14 IST)
துக்ளக் பத்திரிக்கையில் சாத்தான்குளம் விஷயம் மோசமாக சித்தரிக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் மீது கோபம் காட்டியுள்ளார் உதயநிதி. 
 
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது. 
 
அதன்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரையும் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.  
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து துக்ளக் ஒரு அட்டைப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இதனை கண்ட திமுக இளைஞர் அணி செய்லாளர் உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், அப்பாவி இருவரை அடித்தே கொன்றுள்ளனர். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காடுகிறது. 
மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். இச்சூழலிலும் இக்கொலையை நகைச்சுவையாக அட்டைப்படமாக்க முடிகிறது எனில் உங்களின் தமிழர் விரோத, துரோகத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இதுதான் பத்திரிகை தர்மமா? என துக்ளக் குருமூர்த்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து, நீயெல்லாம் ஆம்பளையா? என்று கேட்டபோதே ஓ.பன்னீர் செல்வம் எதிர்த்திருந்தால் இன்று ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பார்த்து குருமூர்த்தி இப்படி கேலி பேசுவாரா? உங்களின் கமிஷன், கலெக்ஷனுக்காக, ஆடிட்டரே அரசு உங்கள் அடிமை என்று அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததால் வந்த வினை என கொதித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments