Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்துக்கள் கொல்லப்பட்ட போது எங்கே போனது திமுக: பிளேட்டை மாற்றும் எச்.ராஜா!!

Advertiesment
இந்துக்கள் கொல்லப்பட்ட போது எங்கே போனது திமுக: பிளேட்டை மாற்றும் எச்.ராஜா!!
, வியாழன், 2 ஜூலை 2020 (13:09 IST)
இந்துக்கள் கொல்லப்பட்ட போது எங்கே போனது திமுக என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் எச் ராஜா. 
 
சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ராஜ் ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுகுறித்து தாமாக முன் வந்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை மாஜிஸ்திரேட் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து உடனடி விசாரணையை மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. 
 
விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட காவலர்களை அதிரடியாக கைது செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் #JayarajAndFenix கொலையில் மக்கள், அரசியல் கட்சிகள், வணிகர்கள், ஊடகங்கள், நீதிமன்ற அழுத்தத்தினால் #TNGovt சிக்கிக் கொண்டது.
 
சில கைதுகளுடன் தப்பிவிடலாம் என அரசு தப்புக்கணக்கு போடக் கூடாது. இனிதான் கடமை தொடங்குகிறது. கண்காணிப்பும் தொடர்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்ததார். 
 
இந்த பதிவிற்கு பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் திருப்புவனம் இராமலிங்கம் முஸ்லீம்களால்  கொல்லப்பட்ட போது எங்கே போனது திமுக. 
 
இந்துக்கள் என்றால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது தானே நீங்கள் மேலே குறிப்பிட்ட அனைவரது கொள்கையும். தேர்தல் வரட்டும் என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தான்குளம் நேராக சென்று விசாரிக்க போகிறேன்! – களமிறங்கிய புதிய ஐ.ஜி முருகன்