Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார் இந்த Friends of Police? கண்டிப்பு காட்ட கோரும் ஸ்டாலின்!

Advertiesment
யார் இந்த Friends of Police? கண்டிப்பு காட்ட கோரும் ஸ்டாலின்!
, வியாழன், 2 ஜூலை 2020 (12:23 IST)
பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை சேர்ந்தவர்களை சும்மா விடக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை. 

 
சாத்தான்குளம் செல்போன்கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த விவகாரத்தில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி, மற்றுமொறு காவலரும் சாட்சியமாக பால்துரை மாறியுள்ளனர். 
 
இந்த கொலை சம்பவத்தில் காவலர்கள் மட்டுமல்லாது ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்பது காவல்துறைக்கு உதவுவதற்காக உள்ளூர் பகுதிகளில் உள்ள இளைஞர்களை கொண்ட அமைப்பு. 
 
இதில் உள்ளவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது, காவலர்கள் கைது செய்யப்பட்டதால் கடமை முடிந்ததாகத் தமிழக அரசு தப்புக் கணக்குப் போடக்கூடாது. 
 
இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வினையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகப் பெருமக்களும் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள். யாரையும் காப்பாற்றத் தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. 
 
இரண்டு பேர் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை' சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸே அடிக்க கூடாது, அது யாரு ‘ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்?” – திருமுருகன் காந்தி ஆவேசம்!