தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக அரசுக்கு எதிராக விவாதங்கள் எழுந்தது குறித்து பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் அதுகுறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
தமிழக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பாஜக குறித்த விமர்சனங்கள் சர்ச்சைக்குள்ளாகின. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர் பலர் சம்பந்தப்பட்ட தனியார் டிவி தொகுப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தாக்கி பதிவுகளை இட்டு வருகின்றனர்.
அதேசமயம் சம்பந்தப்பட்ட தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சிக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்துள்ளன. பத்திரிக்கை சுதந்திரத்தை அரசுகள் கட்டுப்படுத்தக்கூடாது என மற்ற பத்திரிக்கைகளும் குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ” ‘எங்க ஜி பத்தி மட்டும்தான் பேசணும். எதிர்க்கருத்து-இடையூறு இல்லாம பேசணும். கத்திகத்தி பேசணும். வேதனையை சாதனைனு பேசணும். அந்துபோன ரீலை ரியல்னு பேசணும். மொத்தத்துல 24 மணிநேரமும் பேசணும்.’ ‘அதுக்கு நீ நேர்லதான் பேசணும். எதுக்கு விவாதத்துக்கு வர்ற!” என நகைச்சுவை சந்தானம் ஸ்டைலில் கிண்டலடித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பாஜக ஆதரவாளர்களும் தனியார் தொலைக்காட்சி திமுகவிற்கு ஆதரவாய் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.