சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தின் அமைச்சராக வர வேண்டும் என்பது சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கான உழைத்துவரும் உதயநிதியின் திறமை தொகுதியிலேயே சுருங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.