Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக அரசு பேரிச்சம்பழத்துக்கு கூட தேறாது: உதயநிதி ஸ்டாலின் டுவீட்

Advertiesment
அதிமுக அரசு பேரிச்சம்பழத்துக்கு கூட தேறாது: உதயநிதி ஸ்டாலின் டுவீட்
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (20:16 IST)
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை டன் கணக்கில் இந்த ஆண்டுக்கான புதிய பாட புத்தகங்கள் பழைய இரும்பு கடையில் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
 
நடப்பு கல்வி ஆண்டின் 50,000 பள்ளி பாடப்புத்தகங்கள் மயிலாடுதுறையில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் போடப்பட்டுள்ளன. 'நீட், புதிய கல்வி கொள்கை எல்லாம் வருவதால் இனி மாணவர் யாரும் படிக்க மாட்டார்கள்' என புத்தகங்களை பழைய இரும்புக்கடையில் போடச்சொல்லி U-turn அமைச்சர் கட்டளையிட்டாரா? 
 
நம் மாணவர் முன்னேற அவர்கள் கையில் புத்தகங்களை கொடுத்தது கழக அரசு. அதைப்பிடுங்கி பழைய இரும்புக்கடையில் போட்டிருக்கிறது அடிமை அரசு. அடிக்கும் கொள்ளை போதாது என பாடப்புத்தகத்தை எடைக்கு  போடும் இந்த எடுபிடி அரசு, பேரிச்சம்பழத்துக்கு கூட தேறாது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி மருத்துவமனையில் இருந்தபோது பேசியது என்ன? ஏசி சண்முகம் தகவல்