Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் கண்டிஷனை ஏற்றுக்கொண்ட உதயநிதி? சினிமாவுக்கு குட் பாய்!

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (10:40 IST)
அப்பா போட்ட கண்டிஷனை ஏற்று சினிமாவை விட்டு அரசியலில் களமிறங்க உதயநிதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
மக்களவை தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனால் மக்களவைத் தேர்தல் வெற்றியில் உதயநிதிக்கும் மிகப்பெரிய பங்குண்டு என திமுககாரர்கள் சொல்லி வருகிறார்கள். இதனால் அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கவேண்டும் எனவும் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். 
 
இதனால் ஸ்டாலின் அரசியலில் ஆர்வம் இருந்தால் சினிமாவை விட்டுவிட்டு முழு நேரமும் களத்தில் இறங்கு என கூறியதாக சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவின் இளைஞரணி மாநில செயலாளருமான சாமிநாதன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாகவும் திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதோடு உதயநிதி சினிமாவை கைவிட ஒப்புக்கொண்டதால்தான் சாமிநாதன் ராஜினாமா செய்து இப்போது அந்த பதவி உதயநிதிக்கு வழங்கப்பட உள்ளதாம்.
 
சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் நடித்த எந்தப்படமும் சரியாக ஓடவில்லை, எனவே சினிமாவை விட்டு அரசியலில் தந்தைக்கு பக்கபலமாக இருக்கலாம் என இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments