Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்:முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது

குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்:முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது
, திங்கள், 17 ஜூன் 2019 (14:55 IST)
தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு விட்டன.

இதனால் சென்னை மக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம், நெய்வேலி நீர்ப்படுகை, தாமரைப்பாக்கம், மீஞ்சூர், சிக்கராயபுரம் கல்குவாரி ஆகிய பகுதிகளிலிருந்து தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இருப்பினும் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதனால் பொதுமக்கள், இரவு பகல் என்று பாராமல் கேன்களிலும், குடங்களையும், தூக்கிகொண்டு தண்ணீருக்காக அலைவதை காணமுடிகிறது.

மேலும் சென்னையில் பல பகுதிகளில், லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் லாரிகளிலும் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை என குற்ற்ச்சாட்டு எழுந்துள்ளது.

தண்ணீர் பஞ்சத்தின் உச்சக்கட்டமாக பல ஹோட்டல்ளும் விடுதிகளுமே மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்யவும், மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தமிழக முத்ல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் இன்று கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசைப்பட்ட அண்ணியுடன் கள்ளக்காதல் : அண்ணணை கொன்ற இளைஞர் !