Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழத்தில் தண்ணீருக்கு திண்டாட்டம், சிங்கப்பூரில் ஸ்டாலின் கொண்டாட்டம்!

Advertiesment
தமிழத்தில் தண்ணீருக்கு திண்டாட்டம், சிங்கப்பூரில் ஸ்டாலின் கொண்டாட்டம்!
, திங்கள், 17 ஜூன் 2019 (20:52 IST)
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் ஒருகுடம் தண்ணீருக்காக தத்தளித்து வரும் நிலையில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் மனைவியுடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
 
ஒரு பிரச்சனை என்றால் உடனே அரசை குறைகூறி அதிலும் அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் ஐந்து நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு ஒரு நிக்ழ்ச்சியில் கலந்து கொண்டு மனைவியுடன் பலூன் விளையாடி கொண்டிருக்கும் புகைப்படங்கள் டுவிட்டரில் வெளிவந்து வைரலாகியுள்ளது
 
webdunia
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக தண்ணீர் பிரச்சனைக்கு அரசுடன் இணைந்து ஆக்கபூர்வமான ஆலோசனை கூறுவதற்கு பதிலாக கோடை விடுமுறையை குதூகலத்துடன் கொண்டாடும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கடும் கண்டனங்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் இலவச பயிற்சி !