Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி: பாமகவினர் தடுத்ததால் பரபரப்பு

விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி: பாமகவினர் தடுத்ததால் பரபரப்பு
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:06 IST)
நீட் தேர்வு பயம் காரணமாக அரியலூரை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நேற்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம்போல் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் செய்தது என்பதும் அரசியல் தலைவர்கள் நீட்தேர்வு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து விக்னேஷ் மறைவுக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விக்னேஷ் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ.7 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்த நிலையில் பாமக தனது தரப்பிலிருந்து ரூபாய் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தது. மேலும் நேரில் பாமக தலைவர்கள் விக்னேஷ் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதிக்கு அந்த பகுதியில் இருந்த பாமகவினர் அனுமதி மறுத்தனர். இதனால் அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் திமுக- பாமகவினர் இடையேமோதல் ஏற்பட்டது இதனையடுத்து அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணொலிப் பொதுக்குழு, கழகத்தின் புதுமைக்குழு: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!