Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ டைம் இல்லை.. ஃபன் பண்ணும் உதயநிதி!!

இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ டைம் இல்லை.. ஃபன் பண்ணும் உதயநிதி!!
, புதன், 7 அக்டோபர் 2020 (09:48 IST)
விடிய விடிய நடந்த ஆலோசனையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என கிண்டலாக சில பதிவுகளை போட்டுள்ளார் உதயநிதி

 
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் இடைக்க உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற பின்னர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
விடிய விடிய நடந்த அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை ஈபிஎஸ் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. இன்று காலையும் சில அமைச்சர் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்த கூத்துகளும் நடந்தது.  
 
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் விடிய விடிய நடந்த இந்த ஆலோசனையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் என்ன பேசியிருப்பார்கள் என கிண்டலாக சில பதிவுகளை போட்டுள்ளார். 
webdunia
வேளாண் மசோதா, எட்டு வழிச்சாலை, ஸ்டைர்லைட் துப்பாக்கி சூடு, நீட் விலக்கு நாடகம் இப்படி இந்த ஆட்சியை தக்கவைக்க நான்தான் அதிகம் உழைக்கிறேன்- இது ஒருவர். குடியுரிமை திருத்தச்சட்டம், இந்தி திணிப்பு. இருந்தும் ஆட்சிக்காக அவரைவிட நானே சிறந்த அடிமையாக இருக்கேன்- இது இன்னொருவர்.
 
அடிமைகள் தூது நடக்கிறது. ‘நீங்க அவர்னு இல்லை. நாம எல்லாருமே அடிமை என்பதால்தான் ஆட்சி ஓடிட்டு இருக்கு. சேகர் ரெட்டி, கன்டெயினர் லாரி, குட்கா டைரி, ஆர்.கே நகர் ரெய்டு, பொள்ளாச்சி கேஸ், கொடநாடு கொலை, பி.எம். கிசான் ஊழல்... பதிலுக்கு இப்படி அவர்களும் அன்பளிப்பு அளிக்கிறார்கள்.
 
இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை. மிச்சமிருக்கும் மாதத்தையும் கமிஷன் கலெக்ஷனு ஓட்டிடுவோம்.  இப்படியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தள்ளது. இதில் கொரோனாதான் பாவம். கடந்த சில நாட்களாக அது மக்களை தீண்டும் வேகம் அதிகரித்தாலும் அதை சீண்டத்தான் யாருமில்லை என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ஸப்பா டேய் இப்போவே கண்ண கட்டுதுடா... பங்கமாய் கலாய்த்த உதயநிதி!