Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டயல் 9361863559... உதவிக்கு வரும் உதயநிதி அண்ட் கோ!!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (16:51 IST)
தங்களுக்கு தேவையான அத்தியாபசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுபவருக்கு உதவி செய்ய திமுக இளைஞர் அணி முன்வந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. ஊரடங்கால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். 
 
எனவே, திமுக இளைஞர் அணி இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. அதன்படி திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, கொரோனா பேரிடரால் மத்திய - மாநில அரசு கள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுபவர் 9361863559 என்ற எண்ணுக்கு அழைத்தால் உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளனர். 
 
இதனிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்னையை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments