Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் கொரோனா ரெட் அலர்ட்: எந்தெந்த பகுதிகள்? விவரம்

Advertiesment
Tamilnadu
, திங்கள், 30 மார்ச் 2020 (14:43 IST)
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்னையை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதை கொல்கிறீர்கள்? கொரோனாவையா? மனிதனையா? – கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்!