Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டயரா? தரையா ? போட்டி – முதல்வரை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

டயரா? தரையா ? போட்டி – முதல்வரை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!
, சனி, 10 அக்டோபர் 2020 (10:28 IST)
தொல்லியல் துறையில் தமிழை சேர்க்க சொல்லி எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அமைச்சர் சு வெங்கடேசன் ஆகியோர் எழுப்பியக் குரலுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தொல்லியல் துறை பட்டயப்படிப்பு அறிவிப்பில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சு வெங்கடேசன், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழ் ஆய்வாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து நேற்று மத்திய அரசின் திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இதை அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனை என சொல்லி இணையத்தில் பரப்பினர்.

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘ டயரா-தரையா போட்டியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொல்லியல் பட்டயப்படிப்புக்கு தமிழை குறைந்தபட்ச தகுதியா ஒன்றிய அரசு அறிவிக்க தான்தான் காரணம்னு சொல்றது வேடிக்கை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்வினையால் தமிழகமே கொந்தளிக்க, நேற்று மாலை 7.30க்குத்தான் முதல்வர் கடிதமே எழுதினாரு.

அதேநேரம் நேத்தைய தேதிலதான் புது அறிவிப்பும் வந்திருக்கு. அப்படின்னா சாயங்காலம் 7.30க்கு அனுப்புன கடிதத்தை பாத்து, 'ஐயோ..பழனிசாமி கடிதம்'னு பிரதமரே பதறியடிச்சு புது அறிவிப்பை அடுத்த ஒரு மணிநேரத்துல வர வச்சாரா? இது தெரிஞ்சும், 'இதுக்கு எடுபிடிஜிதான் காரணம்'னு சிலர் எழுதுறாங்க.

நீட் மசோதாவையே குப்பைல போட்டவங்க உங்க கடிதத்தை மதிச்சு உடனே ஆர்டர் போட்டாங்கனு சொன்னா, நம்புறதுக்கு தமிழகம் ஒன்னும் உ.பி-ம.பி கிடையாது. ஒருவேளை நீங்க சொல்றது உண்மைன்னா நீட்-பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு விவகாரத்துலயும் லெட்டர் எழுதி உடனே சாதிக்கலாமே அடிமைஜி. செய்வீர்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

DC vs RR: சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் தொடர்ந்து தோற்பது ஏன்?