Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 லட்சம்பா... புதிய உறுப்பினர்களால் முக ஸ்டாலின் குஷி!!

Advertiesment
DMK
, வெள்ளி, 9 அக்டோபர் 2020 (09:05 IST)
‘எல்லோரும் நம்முடன்’ முன்னெடுப்பு இன்று 10 லட்சம் புதிய உறுப்பினர்களுடன் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கான உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திமுக ”எல்லாரும் நம்முடன்” என்ற பெயரில் எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாக திமுகவில் இணைவதற்கான திட்டத்தை மேற்கொண்டது.  
 
இந்த ஆவணங்கள் சரிபார்ப்பு முறை இதில் இல்லை என்பதால் சிலர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக அழகிரி பெயரிலும் சிலர் உறுப்பினர் அட்டைகளை பெற்று அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தனர். 
 
இந்நிலையில் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘எல்லோரும் நம்முடன்’ முன்னெடுப்பு இன்று 10 லட்சம் புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. இணைந்த புதிய உடன்பிறப்புகளில் 53% பேர் இளைஞர்கள்.
 
கொடிய, மக்கள் விரோத அதிமுக ஆட்சியை அகற்றி, 2021-ல் திமுகவின் ஆட்சி உதித்திட தமிழகமே அலை அலையாய் ஆர்ப்பரிக்கிறது. இது ஒரு புதிய விடியலுக்கான துவக்கம் என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்கை தொடர்ந்து பொழுதுபோக்கு பூங்கா: நெறிமுறைகள் வெளியீடு!