Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா சபதம் எடுக்ககூடாதுனு பயந்து மூடிட்டாங்க: உதயநிதி அல்டிமேட்!

Advertiesment
சசிகலா சபதம் எடுக்ககூடாதுனு பயந்து மூடிட்டாங்க: உதயநிதி அல்டிமேட்!
, புதன், 3 பிப்ரவரி 2021 (14:32 IST)
சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு சென்றுவிடுவார் என மூடல் என உதயநிதி கருத்து. 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் திறந்து வைக்கப்பட்டது என்பதும் இதனை பார்ப்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டு இருக்கின்றனர். 
 
இந்நிலையில் இன்று முதல் திடீரென ஜெயலலிதா நினைவகம் மூடப்பட்டது. ஜெயலலிதா நினைவகத்தில் அருங்காட்சியகம் உள்ளிட்ட ஒரு சில பணிகள் நடப்பதன் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் இந்த பணி முடிந்த பின்னரே பார்வையாளர்களுக்காக ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை நேற்று அறிவித்து இருந்தது. 
 
இதனிடையே உதயநிதி ஸ்டாலின், சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு சென்று விடுவார், மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்திலேயே திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு மண்டபம் மூடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகம் முழுவதும் ஒலிக்கும் விவசாய ஆதரவு குரல்கள்! – க்ரேட்டா தன்பெர்கும் ஆதரவு!