யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் வருத்தம்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தனது பிரச்சாரத்தின் போது உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து கிடந்தார் என பேசினார். அத்தோடு விட்டா அந்தம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என பேசினார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.