Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“சின்னவர் என்று சொன்னால் பலருக்கு வயிற்றெரிச்சல்…” கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

Advertiesment
“சின்னவர் என்று சொன்னால் பலருக்கு வயிற்றெரிச்சல்…” கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
, வியாழன், 14 ஜூலை 2022 (15:53 IST)
காஞ்சிபுரத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் உதயநிதி அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் போன்ற ஆதரவு குரல்கள் திமுகவிற்குள் ஒலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் எங்கு திமுக நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு உதயநிதி படத்துடன் இளைஞரணியினர் போஸ்டர்கள், பேனர்களை அமைக்கின்றனர். அதில் பல்வேறு பட்டப்பெயர்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக “மூன்றாவது கலைஞர்” என்ற பெயர் ரொம்ப பேமஸாக உள்ளது.

தன்னை பல்வேறு பட்டப்பெயர்கள் சொல்லி அழைப்பது குறித்து கட்சி தொண்டர்களுக்கு சிலவாரங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுத்த உதயநிதி ஸ்டாலின், தன்னை “மூன்றாவது கலைஞர்”, “இளம் தலைவர்” போன்ற பெயர்களில் அழைக்க வேண்டாம். பலரும் என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். உங்களை எல்லாம் விட நான் சின்னவன் என்பதால், அப்படியே அழையுங்கள்.” என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த பெயரும் சர்ச்சைகளைக் கிளப்ப இப்போது காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி நிகழ்வில் பேசும்போது “பலருக்கும் சின்னவர் என்று சொன்னால் வயிற்றெரிச்சல் வருகிறது. அதனால் என்னை சின்னவன் என்றே அழையுங்கள்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவோட இணைய மாட்டோம்.. நீங்க இங்க வாங்க! – டிடிவி தினகரன்!