Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவின் புதிய அமைப்பு செயலாளர்கள் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

admk adminstrors
, வியாழன், 14 ஜூலை 2022 (11:35 IST)
அதிமுகவின் புதிய அமைப்பு செயலாளர்கள் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
சமீபத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் 

கேபி முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகிய இருவரும் அதிமுகவின் துணிஅ பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இதன்படி புதிய அமைப்பு செயலாளர் பட்டியலில் செல்லூர் ராஜு, சிவி சண்முகம், தனபால், கேபி அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, கே டி ராஜேந்திர பாலாஜி, ராஜன்செல்லப்பா மற்றும் பாலகங்கா ஆகியோர் உள்ளனர்
 
மேலும் அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த பொன்னையன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் பதவியில் இருப்பார் 
 
அதைபோல் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக எஸ்பி வேலு சாமி இருப்பார் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்துவேன்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி