சனதானம் குறித்த பேச்சு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய போது டெங்கு, கொசு போன்று சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.