Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்படி ஒரு தொழில் இருப்பதே அடிமைகளுக்கு தெரியாது: உதயநிதி ஸ்டாலின்

இப்படி ஒரு தொழில் இருப்பதே அடிமைகளுக்கு தெரியாது: உதயநிதி ஸ்டாலின்
, திங்கள், 30 நவம்பர் 2020 (15:22 IST)
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வரும் உதயநிதி, ‘திருவாரூர் மாவட்டம் மன்னை தொகுதி உள்ளிக்கோட்டையில் தென்னை நார் சார்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினேன் என்றும், இந்த தொழில் இருப்பதே அடிமைகளுக்கு தெரியாது என்பது தொழிலாளர் பேச்சின் மூலம் புரிந்தது என்றும், தலைவர் 
ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தென்னை நார் தொழிலாளருக்கு நல்வழி பிறக்குமென உறுதியளித்தேன் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் வை.மாயவநாதன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன் என்று கூறியுள்ள உதயநிதி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அவற்றிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர் என்றும் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் திருவாரூர் மாவட்டம் மன்னை தொகுதியில் உள்ள வடுவூர் கிராமம் நூற்றுக்கணக்கான கபாடி-சிலம்பம்-ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமையை கொண்டது. அங்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட இளம் வீரர்களுடன் இன்று செல்ஃபி எடுத்துக்கொண்டேன் என்றும் உதயநிதி குறிப்பிட்டு இதுகுறித்த வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்வி அடைய விரும்பவில்லை: ரஜினிகாந்த் கூறியதாக நிர்வாகிகள்