அறியாமையில் உளறுகிறார் கமல்: தெளிவாய் பேசும் உதயநிதி

திங்கள், 18 பிப்ரவரி 2019 (09:07 IST)
திமுகவை பற்று குறை கூறும் கமல் அறியாமையில் பேசுகிறார் என ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
கமலின் மக்கள் நீதி மய்யம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. கூட்டணி குறித்த கேள்வி ஒன்றின் போது பதிலளித்த அவர் திமுக மற்றும் அதிமுக இரண்டுமே ஊழல் கறைப்படிந்தவையே. அதனால் இரண்டு கட்சிகளோடும் கூட்டணி இல்லை எனத் தெரிவித்தார்.அதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கமலைக் கிண்டலடிக்கும் விதமாக பூம்பூம் மாட்டுக்காரன் எனக் கேலிக் கட்டுரை வெளியிட்டது. 
 
இந்நிலையில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியக் கமல் ஒருவேளை நான் சட்டமன்றத்திற்கு சென்றால் சட்டையைக் கிழித்துக்கொண்டு வரமாட்டேன். அப்படியே சட்டையை யாராவது கிழித்தாலும் வேறு சட்டையை மாற்றிக்கொண்டே வருவேன் எனவும் தன்னைக் காப்பியடித்து திமுக கிராம சபை கூட்டம் நடத்துவதாக கமல்ஹாசன்  திமுக தலைவர் ஸ்டாலினைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார்.
 
இதுகுறித்து பேசிய நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் அப்படி கூறியிருப்பது அறியாமை எனவும் நீண்டகாலமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களுக்கு செல்கிறார் எனவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் புல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்: கைது செய்த போலீஸ்