Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் திறப்பை கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள்: 1 வருடத்திற்கு முன் உதயநிதியின் டுவிட் வைரல்

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:35 IST)
டாஸ்மாக் திறப்பை கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள்
ஒரு வருடத்துக்கு முன் உதயநிதி பதிவு செய்த ’டாஸ்மாக் கடையை திறப்பதை கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் என்ற டுவிட் தற்போது வைரலாகி வருகிறது 
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை தமிழக முதலமைச்சராக பொறுபேற்க இருக்கும் நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடை காலை 8 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் இதே நாளில் உதயநிதி ஸ்டாலின் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதை கண்டித்து தலைவர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அணியினர் கருப்பு சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன் நின்று கொரோனா தொற்றை தடுப்பதில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும் என பதிவு செய்துள்ளார்
 
இந்த நிலையில் திமுக ஆட்சி நாளை பதவியேற்கவுள்ள நிலையில் உதயநிதியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments